Mittwoch, 26. Januar 2011

                         புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
                                                 சுவிட்சர்லாந்து                                             Web;www.pungudutivuswiss.com , E mail; pungudutivu1@gmail.com ,T.P.No; 0041 31 991 42 06                                                                                                                                                                                                              
                                            தமிழாய் நீ வாழி
                                                ___________________________

ஓரு இனத்தின் வேர் தனது தாய் நிலத்திலிருந்து அடியோடு பிடுங்கி எறியப்படும் போது ,அதன் மூலம் கெடாது நல்லதோர் நாற்றாக உயிர்ப்போடு வாழும் வகை செய்தல் வேண்டும் .இல்லையேல் அந்த இனம் முற்றாக அழியும் நிலை தோன்றும் . அந்த இனத்தின் நாற்று உயிர்ப்போடு செழிக்க அதன் கலை கலாசாரம் பண்பாடு மொழிவளர்ச்சி தேசப்பற்று குன்றாத அடையாளம் பேணப்படவேண்டும் .தாயகத்தின் அந்நிய ஆக்கிரப்பின் விளைவால் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக  நாம் புலம் பெயர்ந்து வந்து விட்டோம் .வந்த இடத்தில் வளமாக  உரமாக வாழும் நிலை கண்டு கொண்டோம்.சொந்த மண்ணை மட்டும் இன்று  இழந்து  விட்டோம் .  என்றோ எழுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை .எமது இனம் காக்கப்படவேண்டும் என்ற உறுதியில் அதன் அடையாளங்களை  காக்க பழகி கடும் பணி ஆற்றுகின்றோம் . மேலைத்தேச இயந்திர மய  வாழ்க்கையில் சிக்கி திணறி திண்டாடுகின்றோம் . இருந்தும் இனத்தின் பற்று இம்மியளவும் விலகவில்லை .
                                              இந்த இனத்தின் காப்புப் படிமானங்களில் மொழிவளர்ச்சியும் கலை நுகர்ச்சியும் கலாசார எழுச்சியும் ஒருங்கற விழுமியங்கள் பேணப்படும் நிலை தொடர எம்மவர் ஆற்றும் பொதுநல சேவைகள் போற்றப்பட வேண்டும் . புலம்பெயர் மண்ணில் வெள்ளிவிழா கண்டு வீறு நடைபோடும் கலை வளரிகளை காணுதல் அரிது.
இனத்தின் அடையாளமான முத்தமிழின் ஓரங்கமாம் நடனக் கலை தொட்டு ஐரோப்பாவின் நாலாபுறமும் சென்று நற்பணி கொண்ட கலாநிதி திருமதி வானதி தேசிங்குராசா அவர்களின் வெள்ளிவிழா காணும் நல்ல செய்தி கேட்டு நாவினிக்க பாராட்டுவோம் .
                                    நடனக்கலையை முறைப்படி கற்று  ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்த போதும் கலை மீதும் மொழி மீதும் கொண்ட காதலினால் இவர் பணி இங்கேயும் தொடர்தல் நெஞ்சை நெகிழ வைக்கிறது. ஐரோப்பிய மண்ணில் வாழ்வதற்கான சவால்,குடும்பத்துக்கான சுமை  கூட இருந்தும் தனது கலைப்பணி இலட்சியத்தில் இருந்து தளர்ந்து விடாது இருபத்தைந்து ஆண்டுகளை எட்டி பிடித்திருக்கும் இவர் ,தனது கலைப்பயணத்தில் மென்மேலும் கற்றலை கூட விட்டு வைக்காது முன்னேறியிருக்கிறார் என்பதே வியப்பான நிலையாகும்
                                         கலைபயிலும் மாணவர்களை சொந்த பிள்ளைகளாக பேணி அவர் தம் வாழ்வியலோடு ஒட்டி உறவாடி அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகி இருக்கிறார் .உரமூட்டி உயர்த்தியிருக்கிறார் . ஐரோப்பா முழுவதும் எமது தாயக விடிவுக்கான நிகழ்வு மேடைகளை எந்தவித சுயநலமும் அற்ற நோக்கில் சிறப்பு செய்திருக்கிறார் .  தமிழுக்காய் தொண்டு செய்வோன் என்றும் தமிழன் நெஞ்சில் வாழ்வான் நீடூழி . இவரது கலைத்தொண்டு,தமிழுக்காக  தேசியத்துக்காக ஜெர்மனி ,சுவிட்சர்லாந்து பிரான்ஸ் பிரித்தானியா ஸ்கண்டிநேவியா என்று எங்கும் நீண்டிருப்பது அறிந்ததே .
 கலாநிதி வானதி தேசிங்குராசாவின் தமிழுக்கான கலைப்பணி மென்மேலும் தொடரட்டும் . இதற்கான ஆற்றலையும் ஆயுளையும் உறுதியையும் ஆண்டவன் அருள்வான் என வேண்டி இதய பூர்வமாக இவரை  வாழ்த்தி வழி விடுவோம் .


´        ´´´தமிழே ; தமிழை தமிழுக்காய் தமிழால் சேவிக்கும் தமிழச்சி-உம்மை
தமிழால் வாழ்த்த தமிழில் தமிழ் சொல் தமிழனால் தேடலேது .தமிழ் போல் வாழி´´´
                                                                                                    சிவ-சந்திரபாலன் 
                                                                                              மக்கள் தொடர்பாளர் 
                                                                          புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வுஒன்றியம் 
                                                                                                     சுவிட்சர்லாந்து 
                                        

Keine Kommentare:

Kommentar veröffentlichen