லிப்ஸ் டிப்ஸ் ?
by Ranjini Kannankurukkal on Wednesday, June 15, 2011 at 9:55am
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில்கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.
வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.
சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.
வைட்டமின் சத்துள்ள உணவுகள்
உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் ற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.
கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன் மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.
உதடு வெடிப்புகள் குணமடைய
அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
லிப்ஸ்டிக் போடும் கலை
கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.
சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.
கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.
வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.
லிப் லைனர் உபயோகிக்கவும்
லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.
லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.
உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.
பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.
உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen