Freitag, 11. Oktober 2013

போளி

உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது. தேவையானப் பொருட்கள் கடலைப்பருப்பு - 4 கப் அச்சு வெல்லம் - 10 பெரியது ஏலக்காய்த்தூள் - சிறிது மைதா மாவு - 2 1/2 கப் சர்க்கரை – 2 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் - 200 மிலி பூரணம் செய்முறை கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல் வேகவைத்து எடுக்கவேண்டும். தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும். பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் கெட்டியாக சேர்த்து அரைக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். போளி செய்முறை மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு பிளாஸ்டிக் தாளில் சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும். அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும். பிறகு அதை ரொட்டி போல் தட்டவும். நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம். தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். சூடான சுவையான பருப்பு போளி ரெடி. இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்தும் பூரணமாக சேர்த்து செய்யலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக சுடும் போது நெய்யும் ஊற்றலாம்.
 


Keine Kommentare:

Kommentar veröffentlichen