Dienstag, 3. Januar 2012

நீதோன்ற வில்லையெனில் எங்கள் கண்ணில்
நீங்காத மருள்; மருளே! பரிதி யாக
நீதோன்ற வில்லையெனில் எங்கள் நெஞ்சில்
நிரந்தரமாய் இருள்; இருளே! குன்ற மாக
நீதோன்ற வில்லையெனில் எங்கள் தோளில்
நிலையான சுமை; சுமையே! மைந்தனாக
நீதோன்ற வில்லையெனில் தமிழன் னைக்கு
நிச்சயமாய்த் தலைகுனிவே; அடிமை வாழ்வே!

புத்தனை நான் காண்கின்றேன், அண்ணா! உன்றன்
புன்னகையில்! புன்னகையில்! சிலுவை யான
கர்த்தனை நான் காண்கின்றேன், அண்ணா! உன்றன்
கண்ணொளியில்! கண்ணொளியில்! மெக்கா தந்த
சித்தனை நான் காண்கின்றேன், அண்ணா! உன்றன்
சீரியதோர் நெற்றியினில்! காந்தி என்ற
உத்தமனைக் காண்கின்றேன், அண்ணா! உன்றன்
உயர்பண்பில்! வளர் அன்பில்! சேவை மூச்சில்!

தொண்டைநாட் டில்பிறந்த அண்ணா, உன்றன்
தொண்டைநா டித்தானே நாங்கள் உள்ளோம்!
பண்டைநற் றமிழ்மாண்பை மீண்டும் வையப்
பார்வைக்குக் கொண்டுவந்தாய்; தந்தாய்! வெண்கற்

Keine Kommentare:

Kommentar veröffentlichen