திருமண பத்திரிகை கொடுத்த மணமகனும் அவரது நண்பனும் விபத்தில் பலி!- மன்னாரில் சம்பவம்
மன்னார் மாவட்டத்தில் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடத்தல் தீவு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு இளைஞர்களும், மன்னாரில் இருந்து விடத்தல் தீவு பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளனர்.
மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜேசப் அகஸ்ரின் றீகன் (வயது-30) மற்றும் அந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி(வயது-30)ஆகிய இரு இளைஞர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி என்பவருக்கு எதிர்வரும் வாரம் திருமணம் நடைபெறவிருப்பதனால் குறித்த இரண்டு போரும் யாழ்ப்பாணத்திற்கு சென்று உறவினர்களுக்கு அழைப்பிதல்களை கொடுத்து விட்டு மீண்டும் மன்னார் திரும்பும் போதே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக இரு சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen