Mittwoch, 4. Januar 2012

அனைத்துக் கட்சிகள் ஒன்றுபட எம்பி எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட முடிவு


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


மாட்டு தாவணி சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு போராடுவதாக மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் விஷயத்தில் கூட அதுபோன்ற ஒற்றுமை இங்கு இருப்பது இல்லை அவர்கள் தெரிவித்தனர். 

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றகையிடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஏ.கே.ராமசாமி தெரிவித்துள்ளார். 

இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேர போக்குவரத்து தடைப்பட்டது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen