Dienstag, 3. Januar 2012

“நல்லதமிழ் எழுதுதற்கே” வழியைச் சொன்னார்;
“நாயக்கர் வரலாற்றை” அறியச் செய்தார்;
வெல்லமெனத் தித்திக்கும் தமிழில், இன்ப
வெள்ளமெனப் பாய்கின்ற கவிதை தந்தார்;
சொல்ல முதக் கடலுக்குள் மூழ்கச் செய்தே
சுகமளிக்கப் பசுமலையின் நாவ லர்தாம்
இல்லையென்ற ஏக்கத்தைத் தணிக்கும் வண்ணம்
இருக்கின்ற பரந்தாமன் வான்போல் வாழ்க!

Keine Kommentare:

Kommentar veröffentlichen